Saturday, January 27, 2007

288. குழந்தை லோகபிரியா நலம்

அன்பான நண்பர்களே,

சிரமம் பார்க்காமல் இந்த 'சற்றே நீண்ட' பதிவை வாசித்து விடும்படி ஒரு அன்பான வேண்டுகோளுடன்,

லோகபிரியாவுக்கு ஜனவரி 24-ஆம் தேதி காலை இதய அறுவை சிகிச்சை, ராமச்சந்திரா மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ICU-வில் வைத்து கவனிக்கப்பட்டு வருகிறாள். மெல்ல நலமடைந்து வருகிறாள். இன்னும் 2-3 நாட்கள் ICU சிகிச்சை தொடரும் என்று டாக்டர் கூறினார். இன்று காலையில் கூட குழந்தையின் தந்தையுடன் பேசினேன். எல்லாம் நல்லவிதமாக முடிந்ததில் அவருக்கும் குடும்பத்தாருக்கும், மகிழ்ச்சியும் மனநிறைவும் என்பதை அவர் குரலிலேயே உணர முடிந்தது ! இன்னும் இரண்டொரு நாட்களில், நானும் சங்கரும் குழந்தையைப் பார்க்கப் போகிறோம்.

நமது வலைப்பதிவு நண்பர்கள் வாயிலாக 56,500 ரூபாய் உதவித்தொகையாக சேகரிக்க முடிந்தது. நமது நண்பர்களிடமிருந்து உதவி வரத் தொடங்குவதற்கு முன்பாகவே, ரூபாய் 50000 (விப்ரோவைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் மாருதிராவ் என்ற தெலுங்குப்பட தயாரிப்பாளர் வாயிலாக) மருத்துவமனையில் செலுத்தப்பட்டிருந்தது.

மொத்தத் தேவை ரூ. 1,25,000 என்று உதவி வேண்டி நான் இட்ட முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். அப்போது தான், ஒரு சந்தோஷமான திருப்பம் ஏற்பட்டது. இந்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது...நாம் (Sankar, Ramki) மற்றும் நம் வலையுலக நண்பர்கள் கிட்டத்தட்ட 56500/- வரை திரட்டி விட்ட நிலையில்....இன்ப அதிர்ச்சியாக சங்கர் வீட்டின் அருகில் இருக்கும் கமலா வேதம் எஜுகேஷனல் மற்றும் சேரிட்டி டிரஸ்ட் நடத்தும் டாக்டர்.ரவிசங்கர் வேதம் அவர்கள் டிரஸ்ட் மூலமாக ரூ.75000/- கான காசோலை அளித்துவிட்டார்.

ஆக, மொத்தத் தொகையும் (1,25,000) கிடைத்து மருத்துவமனையில் செலுத்தப்பட்டது ! நமது வலையுலக நண்பர்கள் அளித்த உதவித் தொகையை வைத்து என்ன செய்யலாம் என்பதற்கு அவர்களே ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என்னளவில் சிலவற்றைச் சொல்கிறேன். முடிவு உங்கள் விருப்பம்.

1. லோகபிரியாவின் பெயரில் வைப்புத் தொகையாக வங்கியில் கட்டி, அதன் வட்டியை குழந்தையின் தந்தை பெற்றுக் கொள்ளலாம்.

2. இன்னொரு உதவி முயற்சிக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

3. நீங்கள் அளித்த தொகையை திருப்பித் தந்து விடலாம்.


அடுத்து, செந்தழல் ரவி, மகாலஷ்மியின் கல்வி நிதியிலிருந்து (அதிகமாக இருந்த) ஒரு 20000 ரூபாயை எனக்கு அனுப்பினார். ரவி அனுப்பிய தொகையை (பின்னர் மற்றொரு உதவி முயற்சிக்குத் தேவைப்பட்டால் தரத் தயாராக இருப்பதாக எனக்கு எழுதியிருக்கும் ரவிக்கு நன்றிகள் பல !) அவருக்கு திருப்பி அனுப்பி விட்டேன்.

லோகபிரியாவின் மருத்துவ உதவிக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த முயற்சிகளில் லோகபிரியாவின் தந்தைக்கு நானும் என் நண்பன் சங்கரும் எங்களால் இயன்ற அளவில் உதவி செய்தோம். அவை குறித்து விரிவாக ஒரு மெயில் எழுதி அனுப்புமாறு சங்கரிடம் கேட்டிருந்தேன். அம்மடலிலிருந்து தகவல்களைத் தருகிறேன். எங்களைத் தவிர, குழந்தையின் தந்தை எடுத்த முயற்சிகளில் சம்பந்தப்பட்ட பலரும் எத்தகைய நல்ல உள்ளம் படைத்தவர்கள் என்பதை எடுத்துச் சொல்வது, என் கடமையும் கூட ! இதை சங்கர் தன் மடலில் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது" என்று சுவைபடக் கூறியிருந்தார் !!!

குழந்தை லோகப்ரியாவிற்காக செய்யப்பட்ட முயற்சிகள் மற்றும் அதன் விவரங்கள்:

1.முதல்வருக்கு மனு கொடுக்கப்பட்டது......முதல்வர் அலுவலகத்திலிருந்து எழும்பூர் குழந்தைகள் மருத்துவ மனையில் குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை இலவசமாக அளிக்க ஆவன செய்வதாக கூறி கடிதம் வந்தது....ஆனால் 5 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய போதிய வசதிகள் அங்கு இல்லாத காரணத்தால் அங்கு செய்ய முடியவில்லை

2.திரு.தொல்.திருமாவளவனை சந்தித்த போது அவர் தனக்கு தெரிந்த தலைமை மருத்துவரிடம் (எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை) தொலை பேசி ஆவன செய்ய வேண்டுகோள் விடுத்தார்.அவரும் முடிந்தது செய்வதாகவும் அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்த முயல்வதாகவும் உறுதியளித்தார்.

3. ரஜினி ரசிகர் ஒருவர் ரூ.10000 வழங்கினார்


4.பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் போட்டதற்கு அவர்கள் உடனே பதிலளித்து ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கடிதம் எழுதி அதில் மருத்துவ செலவில் பாதி அல்லது ரூ.50000/- இதில் எது குறைவோ அதை பிரதமர் நிதியிலிருந்து தர in principle ஒப்புதல் அளிப்பதாகவும் இந்தத்தொகையை அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தகுந்த ஆதாரம் மற்றும் பில்களுடன் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் எனவும் சொல்லியிருந்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிந்தான் இந்தப் பணம் வரும்...ஆனால் முழுப்பணம் கட்டினால்தான் சிகிச்சை செய்வோம் இந்தக் கடிதத்தின் அடிப்படையில் செய்யவோ தள்ளுபடி தரவோ இயலாது என்று கூறி விட்டனர்.

5.தலைமை மருத்துவர் திரு.ரஞ்சித் அவர்கள் 125000 வேண்டாம்... கிட்டத்தட்ட 100000 இருந்தாலே சிகிச்சை தருகிறோம் என அன்புடன் இயைந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

6.விப்ரோ நிருவனத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள் சேர்ந்து 40000/- காசோலை வழங்கியுள்ளனர்

7.வீட்டில் அறுகில் உள்ள தெலுங்கு பட இயக்குனர் தயாரிப்பாளர் திரு.மாருதி ராவ் அவர்களது வீட்டில் 10000/- அளித்தனர்

8.நாமும் சொந்தமாகவும் ,இணைய நண்பர்கள், வலையுலக நண்பர்கள் மூலம் எடுத்த முயற்சிகளும் வலையுலக நண்பர்கள் முழு முனைப்புடன் செய்த உதவிகளும், பேராதரவும் பற்றி அதிகம் எழுதவில்லை.

9. .சத்திய சாயி டிரஸ்டிற்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு மருத்துவமனை பொது மேலாளர் திரு.ஸ்ரீகுமார் அவர்களிடமிருந்து சான்று கடிதம் பெற்று தந்தால் ரூ.30000/- வரை உதவி செய்வதாக பதில் கடிதம் வந்தது.

11.இது தவிர சினேகா என்ற அமைப்பினர் மற்றும் இன்போஸிஸ் நிருவனத்திலிருந்து ராஜதுரை என்கின்ற ஒரு நண்பர் முதலியோர் குழந்தையின் தந்தையை சந்தித்து பணம் மற்றும் உதவி தர முன் வந்ததாக தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னமே முழு தொகை சேர்ந்ததால் இவர்களது உதவி நன்றி கூறி மறுக்கப்பட்டது.

12. லோகபிரியாவின் தந்தை அருள் உதவி வேண்டி அலைந்த அலைச்சல்களை இங்கே நிச்சயம் குறிப்பிட வேண்டும் !


சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனை கணக்கில் மீதமுள்ள பணம் மற்றும் பிரதமர் நிதியிலிருந்து முயற்சித்து பெறப்போகும் பணமும் குழந்தை கணக்கில் ஆஸ்பத்திரியில் இருக்கும் என்றும் post operation care இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு செக்கப் எக்ஸிஜன்சி போன்றவற்றிற்கு உபயோகிக்கப்படும் என்றும் எந்த பணப்பட்டுவாடாவும் செய்யப்பட மாட்டாது என்பதும் நாம் கேட்டறிந்த விஷயங்கள்.

சின்னச் சின்ன செய்திகள்...ஆனாலும் குறிப்பிட வேண்டியவை

நடிகர் திரு.விக்ரம் அவர்களுக்கு உதவி கேட்டு அனுப்பப்பட்டவுடன் 2007 ஆரம்பத்தில் priority list-ல் குழந்தை லோகப்ரியாவின் பெயர் அவர்கள் உதவிப் பட்டியலில் இருந்தது. ஆனால் அதற்கு முன்னமே பணம் சேர்ந்து விட்டபடியால் அங்கிருந்து உதவி தேவையில்லாமல் போய் விட்டது. அப்பொழுது தெரிந்த மற்றும் ஆஸ்பத்திரியில் அறிந்த விஷயம் திரு.விக்ரம் அவர்கள் வருடம் முழுவதும் பல குழந்தைகளுக்கு இந்த மாதிரி அறுவை சிகிச்சைக்கு உதவி செய்வதோடல்லாமல் அவர் துணைவியாருடன் வந்து இந்த குழந்தைகளை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பார்த்து ஆறுதல் மற்றும் தைரியம் சொல்லி செல்வது வழக்கம் .
A real STAR...& Star family.

நாம் குழந்தை லோகப்ரியாவிற்கு உதவி செய்வது பற்றி பேசிக்கொண்டிருந்த போது முன்னர் உதவி பெற்ற குழந்தை ஸ்வேதாவின் தந்தை " சார்..நான் என் குழந்தைக்காக உதவி கேட்டலைந்த போது கிடைத்த தொடர்புகள் பற்றி விவரங்கள் தருகிறேன் மற்றும் நானும் அலைந்து திரிந்து உதவ உங்களுடன் வருகிறேன் என முகம் தெரியாத இன்னொரு குழந்தைக்காக புறப்பட்ட போது தெரிந்தது
Helping and Being Good also is Contagious

இந்தக் குழந்தை வசிக்கும் சேரியில் வசிக்கும் அனைத்து கூலி தொழிளாலர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் சேர்ந்து ஐந்தும் பத்துமாக 2000/- சேகரித்தளித்த போது தெரிந்தது...
Certainly they are not poor in their Heart

உதவிக்கடிதத்தை நகல் எடுக்கச் சென்ற இடத்தில் கடிதம் படித்த நகலக உரிமையாளர் பிரதமர் அலுவலகம் போன்ற இடங்களுக்கு மனு எழுதிக் கொடுத்ததோடல்லாமல் உதவிக்கடிதங்கள் மற்ற பிற ஆவணங்களை இலவசமாக நகலெடுத்து தந்ததோடல்லாமல் அனுப்ப உதவியும் செய்து...
You can also be charitable in your Business too...என்று நிருபித்துவிட்டார்

இதிலிருந்து தெரிவது......after all the world is not as bad as we may think :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 288 ***

18 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test Comment !

said...

உண்மையில் இது மகத்தான பணி. வாழ்துகள் பாலா. மேலும் உதவி தேவை எனில் பதிவிடுங்கள். வலையுலக நட்பு மட்டுமல்ல... "மனிதர்கள்" எங்கும் நிறைந்திருக்கிறார்கள். உதவி செய்ய காத்திருக்கிறோம்

மனம் நெகிழ்ந்திருக்கிறது.

மறுபடியும் வாழ்த்துகள்

said...

முயற்சி திருவினையாக்கும்! இது போன்ற உதவிகள் எமது சமுதாயத்தை மேலும் பலப்படுத்தும். உங்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

Hariharan # 03985177737685368452 said...

எ.அ.பாலா,


லோகப்பிரியாவுக்கு எல்லாவிதமான உதவிகள் கிடைத்து சிகிச்சை பெற்று குணமடைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

கூடுதலாகச் சேர்ந்து விட்ட நிதியை
அடுத்த உதவி தேவைப்படும் நபரைக் கண்டறிந்து உதவுவது என்பது பொருத்தமானதாகவும் சரியானதாகவும் இருக்கும்.

உதவிக்கரங்களின் சக்தி அடிப்படையிலான உதவிகள் தேவைப்படும் பலரைச் சென்றடைய வேண்டும் என்பது என் கருத்து.

உதவிகரமாகப் பலரும் இருக்கின்றார்கள் என்பது ஊக்கம்ளிக்கும் விஷயம்!

அன்புடன்,

ஹரிஹரன்

தருமி said...

//கூடுதலாகச் சேர்ந்து விட்ட நிதியை
அடுத்த உதவி தேவைப்படும் நபரைக் கண்டறிந்து உதவுவது என்பது பொருத்தமானதாகவும் சரியானதாகவும் இருக்கும்.//

வழிமொழிகிறேன்.

வாழ்த்துக்கள்...

ramachandranusha(உஷா) said...

குழந்தைக்கு என் ஆசிகளும், இனி வரும் நாளிலும் நம்மால் இயன்ற உதவியை செய்யப் போவதால் தமிழ் வலைப்பதிவாளர்கள் ஒற்றுமையுடன் இணைந்து சமூகப்பணி செய்தார்கள் என்ற நல்ல பெயர் கிடைக்கப் போகிறது.

said...

வாழ்த்துகள் பாலா. ஒரு உயிரைக் காப்பதன் நிறைவு வேறு எதிலும் கிடைத்திடாது. உங்கள் மனித நேய பணிகள் தொடரட்டும்.

முத்துகுமரன்.

என் பெயரில் உள்ளே நுழையமுடியவில்லை :-(

said...

«ýÒûÇ À¡Ä¡,
Å¡úòÐì¸û...¯¾Å¢Â «¨ÉòÐ ¿ñÀ÷¸û...À¾¢Å÷¸û «¨ÉÅÕìÌõ ¿ýÈ¢¸û ÀÄ

«ýÒ¼ý...º.ºí¸÷

said...

////கூடுதலாகச் சேர்ந்து விட்ட நிதியை
அடுத்த உதவி தேவைப்படும் நபரைக் கண்டறிந்து உதவுவது என்பது பொருத்தமானதாகவும் சரியானதாகவும் இருக்கும்.//

வழிமொழிகிறேன்.

வாழ்த்துக்கள்...//

நானும் இதை வழிமொழிகிறேன்...

said...

அரவிந்தன் நீலகண்டன் has left a new comment on your post "288. குழந்தை லோகபிரியா நலம்":
*******************************
நல்லுள்ளத்திற்கும் தகவலுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும். சமுதாயம் குறித்து நம்பிக்கை ஏற்படுத்தும் நல்ல பதிவு.
*****************************
Posted by அரவிந்தன் நீலகண்டன் to தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா at 1/27/2007 12:05:53 PM

enRenRum-anbudan.BALA said...

varukai thanthu karuththu sonna naNparkaLukku nanRi !

said...

Test :)

said...

குழந்தை லோகப்ரியாவுக்கு வாழ்த்துக்கள் பாலா... உங்களுக்கும் :)

தொடர்ந்து இது போன்ற உதவிகளைக் கண்டறிந்து செய்யுங்கள்..

குழந்தை லோகப்ரியாவின் உடல்நிலைக்காக/ தொடர் சிகிச்சைக்காக மேலும் உதவி தேவைப்படுமெனில், தேவையான பணத்திற்குச் சற்று அதிகமாக மட்டும் அவர் பெயரில் வங்கி வைப்பு நிதியாக இட்டுவிட்டு, மீதத்தை பிற்காலத்தில் செய்யப் போகும் உதவிகளுக்கு வைத்துக் கொள்ளலாம்...

ஜெ. ராம்கி said...

Thanks fora a Good & complete Coverage.

enRenRum-anbudan.BALA said...

பொன்ஸ், ராம்கி,

Thanks !

said...

அன்புள்ள பாலா,
வாழ்த்துக்கள்...உதவிய அனைத்து நண்பர்கள்...பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல

அன்புடன்...ச.சங்கர்

enRenRum-anbudan.BALA said...

Test ! (To ensure that this posting is read by all the friends !)

said...

என்றென்றும் அன்புக்குரிய பாலா,

லோகப்ரியாவுக்கு சிகிச்சை முடிந்து நலம் பெற்று வரும் தகவலுக்கு மிக்க நன்றி. ப்ரியா விரைவில் முழு சுகத்துடன் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மீண்டும் ஒரு நல்ல பணி செய்து முடித்திருக்கின்றீர்கள். உங்களுக்கும், நண்பர் சங்கர் மற்றும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

தொடர்ந்து உதவுவோம்.

கூடுதலாகச் சேர்ந்து விட்ட நிதியை
அடுத்த உதவி தேவைப்படும் நபரைக் கண்டறிந்து உதவுவது என்பது பொருத்தமானதாகவும் சரியானதாகவும் இருக்கும்.


நானும் வழிமொழிகிறேன்!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails